தமன் இசையில் பாடும் விஜய் !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான படம் பீஸ்ட். இந்த படம் வெளியான முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 66 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது .

இந்த படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் . இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார் . பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு வசங்களை எழுதுகிறார் .

படத்தின் பூஜையில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார் . முதல் முறையாக சரத்குமாருடன் விஜய் நடிக்க உள்ளார் . இந்நிலையில் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. முழுக்கு முழுக்க குடும்ப படமாக வெளியாக உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் .

இந்நிலையில் விஜய் அவரது படங்களில் ஒரு பாடல் பாடுவார் . அந்த வகையில் தளபதி 66 படத்திலும் விஜய் ஒரு பாடல் பாட உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.

Share.