யுவன் ஷங்கர் ராஜா இசையில் ரசிகர்களை ஈர்த்த 15 சிறந்த பாடல்களின் லிஸ்ட்!

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தின் பாடல்களே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அரவிந்தன்’. அதன் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார்.

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். கடைசியாக இவர் இசையமைத்து திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்போது தமிழில் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’, ‘பிக் பாஸ் 4’ ரியோ ராஜின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘தல’ அஜித்தின் ‘வலிமை’, சிலம்பரசனின் ‘மாநாடு’, தனுஷின் ‘ராயன்’, அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 31-ஆம் தேதி) யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜாவின் அனைத்து பாடல்களுமே ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இருக்கிறது. அதில் சிறந்த 15 பாடல்களின் லிஸ்ட் இதோ…

1.ஆனந்த யாழை – தங்க மீன்கள் :

2.ஆராரிராரோ – ராம் :

3.முன் பனியா – நந்தா :

4.நினைத்து நினைத்து பார்த்தேன் – 7/G ரெயின்போ காலனி :

5.என் காதல் சொல்ல – பையா :

6.லூசுப்பெண்ணே – வல்லவன் :

7.இதுவரை – கோவா :

8.யாரோடு யாரோ – யோகி :

9.இது காதலா – துள்ளுவதோ இளமை :

10.மெல்ல சிரித்தால் – ஆதலால் காதல் செய்வீர் :

11.காதல் வைத்து – தீபாவளி :

12.தேவதையை கண்டேன் – காதல் கொண்டேன் :

13.காதல் வளர்த்தேன் – மன்மதன் :

14.போகாதே போகாதே – தீபாவளி :

15.இறகைப் போலே – நான் மகான் அல்ல :

Share.