பிரின்ஸ் படத்திலிருந்து வெளியான பாடல் !

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படம் மே மாதம் 13-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன் . இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது .

இந்நிலையில் இந்த படத்திற்கு ப்ரின்ஸ் என தலைப்பு வைத்து இருந்தார்கள். இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு மொழி கற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது .’பிரின்ஸ்’ படத்திற்காக முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது .

Share.