ஹீரோவின் அப்பா கொடுத்த டார்ச்சர்… குட் பை சொன்ன இரண்டு இயக்குநர்கள்!

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ஒரு த்ரில்லர் படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என ஒரு பிரபல இயக்குநர் அதன் ரீமேக் ரைட்ஸை வாங்கினார். அதில் அவரின் மகனையே ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என ஆசைப்பட்டார். மகனுக்கு இது ஒன்றும் அறிமுகப்படம் இல்லை, அவர் ஒரு காலத்தில் டாப் ஸ்டாராக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர்.

பின், அடுத்தடுத்து கொடுத்த ஃப்ளாப் படங்களால் மகனுக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. இந்த ரீமேக் படத்தால், மீண்டும் மகனின் கேரியர் கிராப் அடுத்த லெவலுக்கு செல்லும் என்ற எண்ணத்தில் இருக்கும் அவரது அப்பா, முதலில் இந்த படத்துக்கு ரீமேக் படங்களை இயக்குவதில் கிங்கான ஒரு இயக்குநரை ஒப்பந்தம் செய்தார். பின், அப்பாவின் டார்ச்சரால் அந்த இயக்குநர் இந்த படக்குழுவுக்கு குட் பை சொல்லி விட்டார்.

அதன் பிறகு கடந்த ஆண்டு OTT-யில் ரிலீஸான ஹீரோயின் படத்தை இயக்கிய இயக்குநரை ஒப்பந்தம் செய்தார்கள். அவர் கமிட்டான பின் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்தது. சமீபத்தில், படத்தின் ஒரு டீசரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள் 2-வது இயக்குநரும் ஹீரோவின் அப்பா கொடுத்த டார்ச்சரால் வெளியேறி விட்டார். இப்போது மகனுக்காக அப்பாவே களமிறங்கி அப்படத்தை இயக்கி விடலாம் என்று முடிவு எடுத்து விட்டாராம்.

Share.