2021-யில் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படம் வெளியானது. இதில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது. ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோல்களில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் பாலா, சதீஷ், சூரி, சத்யன், வேல ராமமூர்த்தி, அர்ஜை, ‘கபாலி’ விஸ்வநாத், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் முதல் நாளே (நவம்பர் 4-ஆம் தேதி) தமிழ்நாட்டில் மட்டும் ரூ.24.5 கோடி வசூல் செய்ததாம். இதுவரை இந்த ஆண்டு (2021) தமிழில் வெளிவந்த படங்களில் முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.மாஸ்டர் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2021) பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.40 கோடி வசூல் செய்தது.

2.அண்ணாத்த :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி வெளியான படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.24.5 கோடி வசூல் செய்தது.

3.கர்ணன் :

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10.40 கோடி வசூல் செய்தது.

4.டாக்டர் :

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வெளியான படம் ‘டாக்டர்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.6.40 கோடி வசூல் செய்தது.

5.சுல்தான் :

கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘சுல்தான்’. இந்த படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4.90 கோடி வசூல் செய்தது.

Share.