2022-யில் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை இந்த ஆண்டு (2022) வெளிவந்த படங்களில் முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1.RRR :

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இந்த ஆண்டு (2022) மார்ச் 25-ஆம் தேதி வெளியான படம் ‘RRR’. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் – ராம் சரண் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.234.50 கோடி வசூல் செய்தது.

2.கே.ஜி.எஃப் 2 :

யாஷ் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான படம் ‘கே.ஜி.எஃப் 2’. இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.159 கோடி வசூல் செய்தது.

3.பீஸ்ட் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.81.40 கோடி வசூல் செய்தது.

4.ராதே ஷ்யாம் :

பிரபாஸ் நடிப்பில் இந்த ஆண்டு (2022) மார்ச் 11-ஆம் தேதி வெளியான படம் ‘ராதே ஷ்யாம்’. இந்த படத்தை இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.66.30 கோடி வசூல் செய்தது.

5.விக்ரம் :

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஜூன் 3-ஆம் தேதி வெளியான படம் ‘விக்ரம்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.55.80 கோடி வசூல் செய்தது.

6.வலிமை :

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியான படம் ‘வலிமை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.47.50 கோடி வசூல் செய்தது.

7.எதற்கும் துணிந்தவன் :

சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு (2022) மார்ச் 10-ஆம் தேதி வெளியான படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.15.50 கோடி வசூல் செய்தது.

8.டான் :

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு (2022) மே 13-ஆம் தேதி வெளியான படம் ‘டான்’. இந்த படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.13 கோடி வசூல் செய்தது.

9.காத்துவாக்குல ரெண்டு காதல் :

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.8.50 கோடி வசூல் செய்தது.

10.வீரமே வாகை சூடும் :

விஷால் நடிப்பில் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்த படத்தை இயக்குநர் து.ப.சரவணன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.2.85 கோடி வசூல் செய்தது.

Share.