2022-யில் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 4 படங்களின் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை இந்த ஆண்டு (2022) தமிழில் வெளிவந்த படங்களில் முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 4 படங்களின் லிஸ்ட் இதோ…

1.வலிமை :

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியான படம் ‘வலிமை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.47.50 கோடி வசூல் செய்தது.

2.எதற்கும் துணிந்தவன் :

சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு (2022) மார்ச் 10-ஆம் தேதி வெளியான படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.15.50 கோடி வசூல் செய்தது.

3.வீரமே வாகை சூடும் :

விஷால் நடிப்பில் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்த படத்தை இயக்குநர் து.ப.சரவணன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.2.85 கோடி வசூல் செய்தது.

4.FIR :

விஷ்ணு விஷால் நடிப்பில் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியான படம் ‘FIR’. இந்த படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.2.30 கோடி வசூல் செய்தது.

Share.