2022-யில் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை இந்த ஆண்டு (2022) வெளிவந்த படங்களில் முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.RRR :

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இந்த ஆண்டு (2022) மார்ச் 25-ஆம் தேதி வெளியான படம் ‘RRR’. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் – ராம் சரண் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் உலக அளவில் ரூ.710 கோடி வசூல் செய்தது.

2.கே.ஜி.எஃப் 2 :

யாஷ் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான படம் ‘கே.ஜி.எஃப் 2’. இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் உலக அளவில் ரூ.702.20 கோடி வசூல் செய்தது.

3.பீஸ்ட் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் உலக அளவில் ரூ.199 கோடி வசூல் செய்தது.

4.ராதே ஷ்யாம் :

பிரபாஸ் நடிப்பில் இந்த ஆண்டு (2022) மார்ச் 11-ஆம் தேதி வெளியான படம் ‘ராதே ஷ்யாம்’. இந்த படத்தை இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் உலக அளவில் ரூ.144 கோடி வசூல் செய்தது.

5.வலிமை :

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியான படம் ‘வலிமை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் உலக அளவில் ரூ.141.35 கோடி வசூல் செய்தது.

Share.