என்.ஜே.கே படத்தின் மூன்றாவது ஆண்டு !

நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் என்.ஜி.கே. சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இந்த படத்தை தயாரித்து இருந்தார் .நடிகர் சூர்யா அரசியல்வாதியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் .

செல்வராகவன் மற்றும் நடிகர் சூர்யா முதல் முறையாக கூட்டணி அமைத்த இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது . மேலும் யுவன் ஷங்கர் ராஜா நீண்ட வருடம் கழித்து செல்வாவுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்ற செய்தியும் ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது . எதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருந்தது .

ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம் ரசிகர்களை மிகவும் ஏமாற்றியது . மோசமான விமர்சனத்தை இந்த படம் பெற்றது . இருந்தாலும் நடிகர் சூர்யாவின் நடிப்பு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது . இடைவேளைக்கு முன் அவர் வெளிப்படுத்திய நடிப்பு திரையரங்கை ஒரு நிமிடம் சோகத்தில் ஆழ்த்தியது . இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வில்லை என்றாலும் சூர்யாவின் நடிப்பு மட்டும் அனைவராலும் ரசிக்கப்பட்டது .

இந்நிலையில் என்.ஜி.கே படம் வெளியாகி மூன்று வருடம் ஆனதை முன்னிட்டு டிவீட்டரில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

Share.