பல மாதங்களாக ரசிகர்கள் வெயிட்டிங்… 2021-யில் தமிழில் டப் செய்யப்பட்டுள்ள 5 படங்களின் ரிலீஸ் ப்ளான்!

தமிழில் எப்போதுமே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், ‘தளபதி’ விஜய், ‘தல’ அஜித் போன்ற டாப் ஹீரோக்கள் நடிக்கும் மெகா பட்ஜெட் படங்களின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு (2021) மற்ற மொழிகளில் பாப்புலர் ஹீரோக்கள் நடிப்பில் உருவாகும் படங்களின் தமிழ் டப்பிங் வெர்ஷன் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐந்து படங்களின் லிஸ்ட் மற்றும் அதன் ரிலீஸ் தேதி இதோ…

1.கே.ஜி.எஃப் 2 :

கன்னடத்தில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளார்களாம். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தை இந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் 16-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.RRR :

தெலுங்கில் ‘பாகுபலி’யை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ ஜெட் ஸ்பீடில் இயக்கி வருகிறார் டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம். இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்படத்தை இந்த ஆண்டு (2021) அக்டோபர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.ராதே ஷ்யாம் :

தெலுங்கில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு மிதூன் – மனன் பரத்வாஜ்ஜும், தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் வெர்ஷன்களுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் இசையமைத்து வருகிறார்கள். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். படத்தை இந்த ஆண்டு (2021) ஜூலை 30-ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.புஷ்பா :

தெலுங்கில் ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் ஜெட் ஸ்பீடில் தயாராகி கொண்டிருக்கும் படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், தனஞ்ஜெய், ஹரிஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர், அனுஷயா பரத்வாஜ் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறதாம். இந்த படத்தை இந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

5.லைகர் :

தெலுங்கில் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஜெட் ஸ்பீடில் தயாராகி கொண்டிருக்கும் படம் ‘லைகர்’. இந்த திரைப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்கி வருவதுடன், ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தனது ‘பூரி கனெக்ட்ஸ்’ மூலம் தயாரித்தும் வருகிறார். இந்த படத்தை இந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.