இதுவரை திருமணம் செய்து கொள்ளாத 6 தமிழ் நடிகைகள்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த பல ஹீரோயின்ஸ், சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு லைஃப்பில் செட்டில் ஆகி விட்டனர். ஆனால், சில ஹீரோயின்ஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் ஆறு நடிகைகளின் லிஸ்ட் இதோ…

1.தபு :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தபு. தபு தமிழில் அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய ஹிட்டானது. அது தான் ‘காதல் தேசம்’. ‘காதல் தேசம்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை தபுவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, டேவிட்’ என தமிழ் படங்கள் குவிந்தது. தபு தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, தபு ‘பூல் புலையா 2’ என்ற ஹிந்தி படத்தில் மட்டும் நடித்து கொண்டிருக்கிறார். 49 வயதான தபு இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை.

2.கௌசல்யா :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கௌசல்யா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை கௌசல்யாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘நேருக்கு நேர், ஜாலி, ப்ரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஆசையில் ஓர் கடிதம், வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், தை பொறந்தாச்சு, மனதை திருடிவிட்டாய், திருமலை, நட்பே துணை’ என படங்கள் குவிந்தது. கௌசல்யா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, கௌசல்யா நடிப்பில் தமிழில் ‘காதலிக்க யாருமில்லை’, தெலுங்கில் ‘ரங் தே’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 41 வயதான கௌசல்யா இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை.

3.கிரண் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கிரண். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஜெமினி’. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை கிரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், வின்னர், தென்னவன், நியூ, வாடா, ஜக்குபாய், சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா’ என படங்கள் குவிந்தது. கிரண் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 40 வயதான கிரண் இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை.

4.ஷோபனா :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஷோபனா. பல மலையாள படங்களில் நடித்த ஷோபனா தமிழில் ‘எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, சட்டத்தின் திறப்பு விழா, சிவா, பொன்மனச் செல்வன், வாத்தியார் வீட்டு பிள்ளை, எங்கிட்ட மோதாதே, மல்லுவேட்டி மைனர், தளபதி, போடா போடி’ போன்ற படங்களில் நடித்தார். ஷோபனா மலையாளம், தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 50 வயதான ஷோபனா இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை.

5.நக்மா :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நக்மா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘காதலன்’. ‘காதலன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை நக்மாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாட்ஷா, ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பெரிய தம்பி, அரவிந்தன், ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன்’ என படங்கள் குவிந்தது. நக்மா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி போஜ்புரி, மராத்தி, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 50 வயதான நக்மா இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை.

6.ஸ்ருதி ராஜ் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதி ராஜ். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மாண்புமிகு மாணவன்’. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ஸ்ருதி ராஜுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘இனி எல்லாம் சுகமே, காதல் டாட் காம், ஜெர்ரி, இயக்கம்’ என படங்கள் குவிந்தது. ஸ்ருதி ராஜ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். மேலும், ‘தென்றல், திருமதி செல்வம், அபூர்வ ராகங்கள், அழகு’ போன்ற தமிழ் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். 41 வயதான ஸ்ருதி ராஜ் இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை.

Share.