‘8 தோட்டாக்கள், ஜீவி’ படங்கள் மூலம் ஃபேமஸான வெற்றியின் திருமண புகைப்படங்கள்!
January 21, 2022 / 02:26 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான முதல் படமே (8 தோட்டாக்கள்) வித்தியாசமான த்ரில்லராக கொடுத்து அப்ளாஸ் வாங்கியவர் நடிகர் வெற்றி. முதல் படத்தின் வெற்றியை, அடுத்த படமும் பெற வேண்டும் என்று அதற்கும் வித்தியாசமான கதைக்களத்தை செலக்ட் செய்து நடித்தார். வெற்றியின் இரண்டாவது படமான ‘ஜீவி’-யும் சூப்பர் ஹிட்டானது.
‘ஜீவி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் வெற்றிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘C/O காதல், வனம்’ என படங்கள் குவிந்தது. இப்போது வெற்றி நடிப்பில் ‘மெமரீஸ், தீங்கிரை, ஜோதி, ரெட் சாண்டல், பம்பர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘மெமரீஸ்’ படத்தை ஷ்யாம் – பிரவீன் இயக்கி வருகிறார்கள். இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். சமீபத்தில், இதன் ஷூட்டிங் முடிவடைந்தது. இந்நிலையில், நேற்று (ஜனவரி 20-ஆம் தேதி) நடிகர் வெற்றிக்கு திருமணம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இவரது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Our Actor #Vetri sir get hitched in an intimate ceremony Today!