‘பிக் பாஸ் 4’-யில் எலிமினேட்டான பிறகு ஆஜித் இன்ஸ்டாகிராமில் ஷேரிட்ட முதல் வீடியோ!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, ஆஜித் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் “ஹாய் எல்லோருக்கும் வணக்கம். நான் ஆஜித் பேசுறேன். so எல்லோரும் பிக் பாஸ் பார்த்துருப்பீங்க. நேற்று பிக் பாஸ் வீட்ல இருந்து நான் எவிக்ட் ஆயிட்டேன் and 90 plus days நீங்க வந்து vote பண்ணி என்ன அந்த வீட்டுக்குள்ள இருக்க வச்சுருக்கீங்க. அது வந்து எனக்கு ரொம்ப பெரிய விஷயம்.

உண்மையிலேயே its not a joke. ரொம்ப thanks உங்களோட love and support-க்காக throughout the journey. And ஒரு சில எடிட்ஸ்லாம் இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். உண்மையிலேயே ரொம்ப அழகா இருந்துச்சு. i was very touched அதெல்லாம் பார்த்து. ஏன்னா அந்த மாதிரி எடிட்ஸ்லாம் வந்து ரொம்ப வருஷம் ஆச்சு நான் பார்த்து. And கண்டிப்பா இப்போ வெளியே வந்திருந்தாலும், music side-ல இருந்து என்னால உங்கள எவ்ளோ entertain பண்ண முடியுமோ கண்டிப்பா பண்ணிட்டு இருப்பேன். நிறைய ப்ளான்ஸ் இன்னும் நான் யோசிக்கலை. இனிமே தான் கண்டிப்பா யோசிக்கணும்.

வேற ஏதாவது அப்டேட்ஸ் இருந்தாலும் நான் கண்டிப்பா உங்களுக்கு சொல்றேன். நீங்க post பண்ண positives and negatives எல்லாமே படிச்சேன். so, வீட்டுக்குள்ளையே சொன்ன மாதிரி தான். அந்த இடத்துல நான் நானா தான் இருந்திருக்கேன். எந்த இடத்துலையுமே fake-ஆ இல்ல. நீங்க சொன்ன positives and negatives-ல positives நிறையா எடுத்துக்குறேன். negatives கண்டிப்பா எல்லோருக்குமே அதுவும் பிக் பாஸ்னு ஒரு ஷோவுக்குள்ள போறபோது கண்டிப்பா எல்லோருக்குமே negative இருக்கும். so ignore negativity. thanks a lot உங்க எல்லோருக்குமே” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aajeedh Khalique (@aajeedh_khalique)

Share.