துபாய்க்கு சென்ற படக்குழுவினரை காக்க வைக்கும் ஆக்ஷன் ஹீரோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த ஆக்ஷன் ஹீரோ. தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மாஸ் காட்டி வரும் இந்த ஹீரோவின் புதிய படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், அந்த சைபர் க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அடுத்ததாக துப்பறியும் படத்தின் பார்ட் 2-விலும், எதிரி என்ற படத்திலும் நடித்து வருகிறார் அந்த ஆக்ஷன் ஹீரோ. அந்த எதிரி படத்தில் கடவுள் நடிகர் தான் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இப்படக்குழுவினர் துபாய்க்கு சென்றனர். அங்கு படத்தின் சில முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், படத்தின் ஆக்ஷன் ஹீரோ இன்னும் துபாய்க்கு செல்லவில்லையாம். அங்கு துபாயில் ஆறு நாட்களாக படக்குழுவினர் இவருக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால், ஹீரோவோ கடைசியாக ரிலீஸான சைபர் க்ரைம் த்ரில்லர் படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் ரிசல்ட்டால் அப்செட்டில் இருக்கிறாராம். அதனால் தான் துபாய்க்கு செல்லவில்லையாம்.

Share.