விஜய் படத்தை தவறாக பேசாதீர்கள் – பொங்கிய ஆரி

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட் .இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார் .கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .
மேலும் பீஸ்ட் படம் வெளியான அடுத்த நாள் கே ஜி எஃப் 2 படம் வெளியானது.

இந்நிலையில் கே ஜி எஃப் 2 படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது எனவே கே ஜி எஃப் 2 படத்தை பீஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள் . இவ்வாறு இரண்டு படத்தின் வசூல் மற்றும் வரவேற்பை ஒப்பிட்டு பேசுவது தவறு என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஆரி தற்பொழுது இதை பற்றி பேசி உள்ளார் . அதில் ” 2 வருடங்களாக திரையரங்ககள் ஓடாமல் அவ்வளவு கஷ்டப்பட்டார்கள், ஆனால் தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய இரண்டு படங்களும் நன்றாக ஓடி வருகிறது. அந்த இரண்டு படங்களுக்கு வருபவர்களும் காசு கொடுத்து தான் படம் பார்க்கிறார்கள். அதனால் ஒரு படத்தை தாழ்த்தி இன்னொரு படத்தை உயர்த்தி பேசுவது சரியல்ல அதுவும் குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள் இவ்வாறு பேசுவது சரியல்ல படம் நன்றாக இருக்கா இல்லையா என்பதை வசூலை வைத்து படக்குழு சரிப்படுத்தி கொள்வார்கள் என்றும் மேலும் ஒருவரை திருத்திக்க விமர்சனம் சொல்லுங்கள், அழிக்க விமர்சனங்கள் சொல்லாதீர்கள்” என பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

Share.