நடிகரும், இயக்குநருமான ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ‘ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அர்ஜுன் நடிகராக தமிழில் அறிமுகமான படம் ‘நன்றி’. இந்த படத்தை இயக்குநர் இராம நாராயணன் இயக்கியிருந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அர்ஜுனின் 100-வது படம் ‘மன்னவரு சின்னவரு’, 150-வது படம் ‘நிபுணன்’.

‘நிபுணன்’ படத்துக்கு பிறகு ‘லை, நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா, இரும்புத் திரை, கொலைகாரன், குருக்ஷேத்ரா, ஜாக் அண்ட் டேனியல், ஹீரோ, பிரண்ட்ஷிப்’ என பல படங்களில் நடித்து விட்டார் ‘ஆக்ஷன் கிங்’. அர்ஜுன் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ‘சேவகன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை’ போன்ற படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வலம் வந்திருக்கிறார். 1988-ஆம் ஆண்டு கன்னட நடிகை நிவேதிதாவை திருமணம் செய்து கொண்டார் அர்ஜுன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது, அர்ஜுன் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், உடல் நலக் குறைவு
காரணமாக சிகிச்சை பெற்று வந்த ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் தாயார் லக்ஷ்மி (வயது 85) இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share.