பிரபல நடிகரும், இயக்குநருமான ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ‘ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அர்ஜுன் நடிகராக தமிழில் அறிமுகமான படம் ‘நன்றி’. இந்த படத்தை இயக்குநர் இராம நாராயணன் இயக்கியிருந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அர்ஜுனின் 100-வது படம் ‘மன்னவரு சின்னவரு’, 150-வது படம் ‘நிபுணன்’.

‘நிபுணன்’ படத்துக்கு பிறகு ‘லை, நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா, இரும்புத் திரை, கொலைகாரன், குருக்ஷேத்ரா, ஜாக் அண்ட் டேனியல், ஹீரோ’ என பல படங்களில் நடித்து விட்டார் ‘ஆக்ஷன் கிங்’. அர்ஜுன் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ‘சேவகன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை’ போன்ற படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வலம் வந்திருக்கிறார். இப்போது அர்ஜுன் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

 

Share.