நடிகர் தனுஷ் செய்த காரியம்?… மிகுந்த வருத்தத்தில் ‘தல’ அஜித்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி காலை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் டாப் ஹீரோவும், தனுஷின் மாமனாருமான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

தற்போது, நடிகர் தனுஷால் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் தனுஷ் போயஸ் கார்டனில் வாங்கியிருக்கும் இடம் தான் என்று சொல்லப்படுகிறது. அந்த இடத்தை முதலில் வாங்கவிருந்தது நம்ம அஜித் தானாம். கிட்டத்திட்ட இறுதிக்கட்டத்தில் அதற்கான பேச்சு வார்த்தை இருந்த நிலையில், தனுஷ் அதிக விலைக்கு அந்த இடத்தை வாங்கி விட்டதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

Share.