சிம்புவின் பார்ட்டியில் கலந்து கொண்டார் நடிகர் அஜித்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் படங்களில் நடிப்பதை தவிர வேறு எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவர் அல்ல.

இவரது ரசிகர்கள் ஏதேனும் பொது நிகழ்ச்சியில் இவரை பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கி வருகிறார்கள். சில வருடங்கள் வரை பொது நிகழ்ச்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்த நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை.

இதனால் இதற்கு முன்னர் இவர் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சிகளில் வரும் வீடியோக்கள் புகைப்படங்களை அவ்வப்போது அவரது ரசிகர்கள் வெளியிட்டு தங்கள் அன்பை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த வரிசையில் தற்போது நடிகர் அஜித் சிம்புவின் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அஜித் ரசிகர்களுக்காக இந்த புகைப்படம்!

Share.