உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த அஜித் படங்களின் லிஸ்ட்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி நடித்திருக்கிறார். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 8 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.103.10 கோடியும், உலக அளவில் ரூ.192.24 கோடியும் வசூல் செய்துள்ளதாம். இதுவரை அஜித் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் லிஸ்ட் இதோ…

1.விஸ்வாசம் :


‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித்தின் மகளாக வலம் வந்த அனிகா சுரேந்திரனுக்கு அதிக ஸ்கோப் இருந்தது.

2.விவேகம் :

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘விவேகம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

3.வேதாளம் :

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘வேதாளம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் லக்ஷ்மி மேனன், தம்பி இராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

4.நேர்கொண்ட பார்வை :

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி, ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர்.

5.ஆரம்பம் :

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘ஆரம்பம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஆர்யா, டாப்சி, ராணா டகுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

6.என்னை அறிந்தால் :

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘என்னை அறிந்தால்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, அருண் விஜய், அனிகா சுரேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Share.