நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . நடிகை மஞ்சு மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்துள்ளது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . தற்பொழுது இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது . அதில் மஞ்சு வாரியர் நடித்து வருகிறார் .வருகின்ற தீபாவளிக்கு இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிற தகவலும் வெளியாகி இருந்தது . ஆனால் தற்போது இந்த படம் டிசம்பர் மாதம் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது .இந்நிலையில் நடிகர் அஜித் உலக சுற்றுலா சென்று உள்ளார் . அங்கிருந்து வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமாக மாறியுள்ளது !

Share.