முன்னணி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இப்போது இவர் நடிப்பில் ‘பிரம்மாஸ்திரா, குட்பை, UUNCHAI, ப்ராஜெக்ட் K’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகவுள்ளது. நாக் அஷ்வின் இயக்கும் ‘ப்ராஜெக்ட் K’ படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகுகிறது.

இதில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்கிறார். சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகும் இப்படத்தின் கதைக்களம் 2050-ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

Share.