எஸ்.பி.பாலசுப்ரமணியம் இழப்பு குறித்து நடிகர் பார்த்திபன்!

தமிழ் சினிமாவின் சிறந்த பாடல்களை கொடுத்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார்.

இவரது இழப்பு தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் தங்கள் இரங்கலை கூட தெரிவிக்க முடியாத நிலையில் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

இவரின் திடீர் இறப்பு குறித்து நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தனது இரங்கல் அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளதாவது, “பேசமுடியவில்லை. அழுகை குரலை அடைக்கிறது. உலகை கவர்ந்த குரலையே இழந்துவிட்டு ஊடகங்களில் இருந்து என் சோகத்தை பதிய இடைவிடாத அழைப்பு. எப்படி பேச? என்ன பேச? மீண்டும் வேண்டுகிறேன்-அவர் குடும்பத்தாருக்கு சமாதானமடைய சக்தி கிடைக்க”என்று தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

Share.