அடேங்கப்பா… நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் எப்போது நாம் வெற்றி அடைவோம், எப்போது தோல்வி அடைவோம் என்பதை யாராலையும் கணிக்க முடியாது. இருப்பினும் தொடர்ந்து தோல்வி வந்தாலும், விடா முயற்சி செய்து தான் எதற்காக ஆசைப்பட்டோமோ, அந்த இலக்கை அடைவதற்கு தொடர்ந்து போராடினால், கண்டிப்பாக அதற்கு உண்டான பலன் கிடைக்கும். இதற்கு சரியான உதாரணம் நடிகர் அருண் விஜய்.

ஒரு பிரபல நடிகரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான். ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய்.

‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக அவரின் கால்ஷீட் டைரியில் ‘குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது. இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், யானை, பார்டர், ஓ மை டாக்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.80 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.