நடிகர் பரத் நடிக்கும் ஐம்பதாவது படம் !

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பரத் . அதன் பிறகு விஷாலுடன் இணைந்து செல்லமே படத்தில் நடித்து இருந்தார் . இதர பின்னர் பால்ஜி சக்திவேல் இயக்கத்தில் காதல் என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்து இருந்தார் . நடிகை ஐஸ்வர்யா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் . இந்த படம் 2004 -ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது .\

காதல் படத்தை தொடர்ந்து எம் மகன் ,பட்டியல் , கூடல் நகர் , என்று அடுத்து அடுத்து படங்களில் நடித்து கொண்டு இருந்தார் . ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை . இதனால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது . அதன் பிறகு ஸ்பைடர் , குரூப் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினர் .

இந்நிலையில் நடிகர் பரத் நடிக்கும் அவரது ஐம்பதாவது படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது . இந்த படத்திற்கு லவ் என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள் . இந்த படத்தின் போஸ்டரை மலையாள நடிகர் மம்முட்டி வெளியிட்டார் . இந்த படம் மலையாள படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது . வாணி போஜன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் .

Share.