“ட்விட்டரில் என்னுடைய பெயரில் போலி அக்கவுண்ட்”… காவல் ஆணையரிடம் புகார் அளித்த நடிகர் சார்லி!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சார்லி. இவர் பல தமிழ் படங்களில் காமெடியன் மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, நடிகர் சார்லி சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர் கொடுத்த புகாரில் “கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றிவரும் நான் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் (SOCIAL MEDIA) இல்லை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதியின்றி இன்று (ஜூன் 11-ஆம் தேதி) ட்விட்டரில் FAKE ID-யோடு (https://twitter.com/ActorCharle/status/1402975543897694208) போலியாக கணக்கு துவங்கி இருக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிக பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசின் காவல் துறைக்கு என் நன்றியும் வணக்கமும்” என்று கூறியுள்ளார்.

Share.