அடேங்கப்பா… நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. ஒரு நடிகராக திரையில் மாஸ் காட்டுவதற்கு முன்பே, எஸ்.ஜே.சூர்யா ஒரு இயக்குநராக சினிமாவில் தன் முத்திரையை பதித்தார். முதல் படமே ‘தல’ அஜித்தை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தார். அது தான் ‘வாலி’. ‘வாலி’-க்கு பிறகு ‘குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை’ என தொடர்ந்து படங்கள் இயக்கினார்.

இதில் ‘நியூ, இசை, அன்பே ஆருயிரே’வில் ஒரு ஹீரோவாகவும் வலம் வந்து கெத்து காட்டினார் எஸ்.ஜே.சூர்யா. இப்படங்கள் மட்டுமின்றி மற்ற இயக்குநர்கள் இயக்கிய ‘கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி, இறைவி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு’ என தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

இப்போது இவர் நடிப்பில் ‘பொம்மை, உயர்ந்த மனிதன், டான், கடமையை செய், இறவாக்காலம்’, விஷாலின் புதிய படம் என ஐந்து படங்களும், இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கும் வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

 

Share.