நடிகர் ஜெய் அவர்களுக்கு பிடித்த இயக்குனர் யார் தெரியுமா ?

2007 ஆம் ஆண்டில், வெங்கட் பிரபுவின் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான சென்னை 600028 இல் ஒரு முன்னணி பாத்திரத்திற்காக ஜெய் வெற்றிகரமாக நடிகராக கோலிவுட்டில் அறிமுகமானார் . இவர் நடித்த சுப்ரமணியபுரம் (2008) திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும் ஜெய் அவரது நடிப்பிற்காக பலரால் பாராட்டப்பட்டார்.

ஜெய் தனது 16வது வயதில் 2002 ஆம் ஆண்டு பகவதி திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமானார், இயக்குனர் ஏ. வெங்கடேஷ், விஜய் போலவே ஜெய் இருந்த காரணத்தால் ஜெய்யைத் தேர்ந்தெடுத்தார். அதன் பின் நாயகனாக அறிமுகமாகி ராஜா ராணி , எங்கேயும் எப்போதும் , நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் .

நடிகர் ஜெய் நல்ல நிலைமைக்கு வந்து இருந்தாலும் சமீப காலமாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவது குறைந்து வருகிறது .இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எண்ணித்துணிக , பட்டாம்பூச்சி போன்ற படங்களும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை .

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ஜெய் தனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்கள் யார் தெரிவித்துள்ளார் . அதில் மணிரத்னம் மற்றும் ஷங்கர் தனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்கள் என்று தெரிவித்துள்ளார் .

Share.