ஜெயம் ரவி ரசிகர் விபத்தில் மரணம்!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு தனி இடம் வைத்துள்ளார். தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. ஜெயம் ரவி பெயரில் ரசிகர்கள் மன்றமும் பல ஊர்களில் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் நிலையூரைச் சேர்ந்தவர் செந்தில். தீவிர ஜெயம் ரவி ரசிகரான இவர், ஜெயம்ரவி ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தார். இவர் அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த ஜெயம் ரவி மதுரை நிலையூரில் உள்ள செந்திலின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செந்திலின் மனைவி மற்றும் இரு குழந்தைகளைச் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார்.

செந்திலின் குடும்ப வறுமையைப் போக்க ரூ.5 லட்சத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், இரு குழந்தைகளுக்குமான கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியின் இந்த செயல் பலரால் பாராட்டப்படுகிறது.

Share.