அடேங்கப்பா… நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனான ஜீவாவின் முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ஆசை ஆசையாய்’. இந்த படத்தை ரவி மரியா இயக்கியிருந்தார். இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் ஜீவாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தித்திக்குதே, ராம், டிஸ்யூம், அரண், ஈ, பொறி, கற்றது தமிழ், ராமேஸ்வரம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம், சிங்கம் புலி, கோ, ரௌத்திரம், வந்தான் வென்றான், நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், டேவிட், என்றென்றும் புன்னகை, யான், போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம், சங்கிலி புங்கிலி கதவ தொற, கலகலப்பு 2, கீ, கொரில்லா, சீறு, ஜிப்ஸி, களத்தில் சந்திப்போம், 83’ என படங்கள் குவிந்தது.

பிரபல நடிகரும், ‘பிக் பாஸ் 4’ போட்டியாளருமான ‘ஜித்தன்’ ரமேஷ், ஜீவாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நடிகர் ஜீவா நடிப்பில் தமிழில் ‘மேதாவி, கோல்மால், வரலாறு முக்கியம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.