கார்த்தியுடன் மோத நாள் குறித்த சிவகார்த்திகேயன்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் நடிப்பில் ‘அயலான்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார்.

இந்த படத்தை ‘ஜாதி ரத்னாலு’ என்ற தெலுங்கு படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அனுதீப் கேவி இயக்கி வருகிறாராம். ‘ப்ரின்ஸ்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகுகிறது. இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – சுரேஷ் புரொடக்ஷன்ஸ் – சாந்தி டாக்கீஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதில் ஹீரோயினாக மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடிக்கிறார். இதற்கு தமன் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதே நாளில் கார்த்தியின் ‘சர்தார்’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.