எஸ் பி பாலசுப்பிரமணியம் இறப்பிற்கு நடிகர் கார்த்தியின் இரங்கல் அறிக்கை!

தமிழ் சினிமாவின் சிறந்த பாடல்களை கொடுத்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார்.

இவரது இழப்பு தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் தங்கள் இரங்கலை கூட தெரிவிக்க முடியாத நிலையில் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இவரது ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இணையதளம் முழுவதும் இவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் நடிகர் கார்த்தி குறிப்பிட்டுள்ளதாவது ” இப்படி ஒரு உன்னதமான குரலுக்கு சொந்தக்காரருக்கு குட் பை சொல்லும் நிலை வரும் என்று எதிர் பார்க்கவே இல்லை. உலகின் அனைத்து உணர்வுகளையும் இவர் பாடலின் மூலம் உணர்ந்து நமக்கு தன்னடக்கம் குறித்தும் அனைத்து உயிர்களையும் சமமாக நடத்துவது குறித்தும் பாடத்தையும் கற்றுக் கொடுத்துள்ளார். உங்களை எப்பொழுதும் மறக்க முடியாது. லவ் யூ சார்” என்று உணர்ச்சி வசமாக தன் இரங்கலை குறிப்பிட்டுள்ளார்.

Share.