ஒரே கதையை நிராகரித்த விஜய் சேதுபதி மற்றும் ஜோதிகா

2011-ஆம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் என்கிற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சரவணன் .அந்த படத்தில் ஜெய் மற்றும் அஞ்சலி நடித்து இருந்தனர்.

A R முருகதாஸ் இந்த படத்தை தயாரித்து இருந்தார் . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவன் வேற மாதிரி என்கிற படத்தை இயக்கி இருந்தார் . அந்த படத்தில் விக்ரம் பிரபு , சுரபி ஆகியோர் நடித்து இருந்தனர் . C.சத்யா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது .

இதனை தொடர்ந்து வலியவன் என்கிற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஜெய் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருந்தார் . D.இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் இந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகை திரிஷா நடிப்பில் ராங்கி என்கிற படத்தை இயக்கினார் ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை . இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது . இந்த ஆண்டு இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது .

இந்நிலையில் இயக்குனர் சரவணன் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு கிராமத்து கதையை படமாக்கலாம் என்ற முடிவில் இருந்துள்ளார் . ஆனால் அந்த கதையை கேட்ட ஜோதிகா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தங்களின் கால்ஷீட் தற்போதைக்கு இல்லை எனக்கூறி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது .இந்நிலையில் அந்த கதையில் தற்பொழுது நடிகர் கார்த்தி நடிக்க உளளதாக தாவல் வெளியாகி இருக்கிறது .

Share.