தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது ரசிகர்கள் இவரை ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். மகேஷ் பாபு தமிழிலும் ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இப்போது மகேஷ் பாபு ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பரசுராம் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் கைகோர்க்கவிருக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு. இந்நிலையில், மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

Share.