அடேங்கப்பா… நடிகர் ‘மிர்ச்சி’ சிவாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் ‘மிர்ச்சி’ சிவா. ‘மிர்ச்சி’ சிவா முக்கிய ரோலில் நடித்த ‘சென்னை 28’ திரைப்படம் தான் அவர் மீது கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு ரிலீஸான ‘தமிழ்ப் படம்’, ‘மிர்ச்சி’ சிவாவின் கேரியரில் ஹைலைட்டான படமாக அமைந்தது. அப்படத்தை இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார்.

‘தமிழ்ப் படம்’ வெற்றிக்கு பிறகு ‘மிர்ச்சி’ சிவாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வ, பதினாறு, கலகலப்பு, தில்லு முல்லு, சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை, மசாலா படம், 144, அட்ரா மச்சான் விசிலு, சென்னை 28 பார்ட் 2, கலகலப்பு 2, தமிழ்ப் படம் 2’ என படங்கள் குவிந்தது.

இப்போது ‘மிர்ச்சி’ சிவா நடிப்பில் ‘சுமோ, பார்ட்டி, சலூன், இடியட், கோல்மால், காசேதான் கடவுளடா, சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ‘மிர்ச்சி’ சிவாவின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.