அடேங்கப்பா… நடிகர் பிரசன்னாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா. இவர் அறிமுகமான முதல் படமே முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமின் தயாரிப்பில் அமைந்தது. அந்த படம் தான் ‘ஃபைவ் ஸ்டார்’. இந்த படத்தை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார். அதன் பிறகு 2004-ஆம் ஆண்டு வெளியான ‘அழகிய தீயே’ என்ற படம் சூப்பர் ஹிட்டாகி, பிரசன்னாவின் நடிப்புக்கும் லைக்ஸ் போட வைத்தது.

‘அழகிய தீயே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு பிரசன்னாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கண்ட நாள் முதல், சாது மிரண்டா, அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு, நாணயம், பாணா காத்தாடி, முரண், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாதம், ப.பாண்டி, நிபுணன், துப்பறிவாளன், திருட்டுப் பயலே 2, மாஃபியா : அத்தியாயம் ஒன்று, நாங்க ரொம்ப பிஸி’ என படங்கள் குவிந்தது.

2012-ஆம் ஆண்டு பிரபல நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இப்போது பிரசன்னா நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ உருவாகி வருகிறது. இந்த படத்தை விஷாலே இயக்கி, ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் பிரசன்னாவின் சொத்து மதிப்பு ரூ.30 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.