கன்னட படத்தில் நடிக்கும் தமிழ் ஹீரோ!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தார். தமிழ் கதாநாயகர்களின் அனைத்து படங்களிலும் இவர் நடித்தார் . இவர் இருந்தாலே படம் நிச்சயம் நன்றாக இருக்கும், நகைச்சுவையாக இருக்கும் என்று ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்றார்கள்.

இந்நிலையில் நடிகர் சந்தானம் இனிமேல் நகைச்சுவை கதாநாயகனாக நடிக்க போவதில்லை என்று அறிவித்தார் . இதனை தொடர்ந்து தமிழில் நிறைய நகைச்சுவை படங்கள் வருவது குறைந்தது .தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றும் இவரின் காமெடி காட்சிகளை ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவர் கதாநாயகனாக நடித்த படங்களில் சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் ரசிக்கும்படி இருந்தன. நகைச்சுவை நடிகனாக இவர் வென்ற மாதிரி கதாநாயகனாக இன்னும் வெல்லவில்லை.இந்நிலையில் நடிகர் சந்தானம் கன்னட படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 15வது படமாக இந்த படம் இருக்கப்போகிறது . அந்த படத்தை பிரஷாந்த் ராஜ் என்ற கன்னட இயக்குனர் இயக்க இருக்கிறார். கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருக்கிறது.

Share.