சாந்தனு நடிக்கவிருந்த சூப்பர்ஹிட் படத்தில் நடித்த விமல் !

2010 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படம் களவாணி . இந்த படத்தை புதுமுக இயக்குனர் A. சற்குணம் எழுதி இயக்கி இருந்தார் . இதில் விமல் மற்றும் அறிமுக நடிகை ஓவியா முதன்மை பாத்திரங்களில் நடித்து இருந்தனர் .சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு மற்றும் இளவரசு ஆகியோர் துணை வேடங்களில் நடித்து இருந்தனர் . 2010-ல் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. பின்னர் அந்த திரைப்படம் கன்னடத்தில் கிராடகா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது, மேலும் ஓவியா தனது பாத்திரத்தில் மீண்டும் நடித்தார்.

தஞ்சாவூர் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றன, மேலும் இது இரு கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியிலும் கூட சண்டை ஏற்படுகிறது . இரண்டு ஊர்களுக்கும் இடையே சண்டை இருக்கும் நிலையில் இரண்டு ஊரை சேர்ந்த ஆண் பெண் காதலித்து எப்படி திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தான் கதை .


இந்த படம் வெளியாகி நடிகர் விமலின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்து இருந்தது . ஆனால் இந்த படத்தில் முதலில் நாயகனாக நடிக்க வைக்க நடிகர் சாந்தனு அணுகி இருக்கிறார் இயக்குனர் .ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை சாந்தனு இழந்தார் .

Share.