அடேங்கப்பா… நடிகர் ஷாந்தனுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு. பாப்புலர் இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான ஷாந்தனு குழந்தை நட்சத்திரமாக ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார் ஷாந்தனு.

‘சக்கரகட்டி, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவக் கதைகள், மாஸ்டர், கசட தபற, முருங்கைகாய் சிப்ஸ்’ என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் ஷாந்தனு. 2015-யில் VJ கீர்த்தியை திருமணம் செய்து கொண்டார் ஷாந்தனு.

இப்போது, ஷாந்தனு நடிப்பில் ‘இராவண கோட்டம்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரம் சுகுமாரன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இந்நிலையில், நடிகர் ஷாந்தனுவின் சொத்து மதிப்பு ரூ.15 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.