ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உட்பட சில படங்களின் தயாரிப்பாளர்கள் நடிகர் சிலம்பரசன் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இதன் விளைவாக சிலம்பரசனுக்கு ரெட் கார்டு கொடுத்தது தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால் சிலம்பரசனின் புதிய படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்துக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. தற்போது, தயாரிப்பளர்கள் சங்கம் சிலம்பரசனுக்கு போட்டிருந்த ரெட் கார்டை நீக்கியுள்ளதாகவும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறாராம். இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக மராத்தி பட நடிகை கயாடு லோகரி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share.