இதுவரை யாரும் பார்த்திராத சிவாஜி கணேசனின் அரிய புகைப்பட தொகுப்பு!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 1-ஆம் தேதி). அறிமுகமான முதல் படத்திலையே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துக் காட்டியவர் சிவாஜி கணேசன். அந்த படம் தான் ‘பராசக்தி’. அதன் பிறகு சிவாஜி கணேசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

1964-ஆம் ஆண்டு வெளியான ‘நவராத்திரி’ 100-வது படமாகவும், 1968-ஆம் ஆண்டு வெளியான ‘உயர்ந்த மனிதன்’ 125-வது படமாகவும், 1971-ஆம் ஆண்டு வெளியான ‘சவாலே சமாளி’ 150-வது படமாகவும், 1975-ஆம் ஆண்டு வெளியான ‘அவன் தான் மனிதன்’ 175-வது படமாகவும், 1979-ஆம் ஆண்டு வெளியான ‘திரிசூலம்’ 200-வது படமாகவும் சிவாஜி கணேசனுக்கு அமைந்தது.

கடைசியாக சிவாஜி கணேசன் நடித்த படம் ‘பூப்பறிக்க வருகிறோம்’. 1952-ஆம் ஆண்டு கமலா என்பவரை சிவாஜி கணேசன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். நடிகர் சிவாஜி கணேசன் 2001-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி இயற்கை எய்தினார். இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் சிவாஜி கணேசனின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

Share.