இதுவரை யாரும் பார்த்திராத சுதீப்பின் அரிய புகைப்பட தொகுப்பு!

திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் சுதீப்பிற்கு இன்று (செப்டம்பர் 2-ஆம் தேதி) பிறந்த நாளாம். கன்னடத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தயவ்வா’. இது தான் சுதீப் அறிமுகமான முதல் திரைப்படமாம். இதன் பிறகு பல கன்னட படங்களில் நடித்த சுதீப் ‘பூன்க்’ என்ற படம் மூலம் ஹிந்தி திரையுலகில் என்ட்ரியானார்.

சூர்யாவின் ‘ரத்த சரித்திரம்’ தமிழ் வெர்ஷனில் சுதீப்பும் நடித்திருந்தார். ‘ரத்த சரித்திரம்’ படத்துக்கு பிறகு பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ (தமிழ்) படத்தில் சுதீப் நடித்திருந்தார். இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சுதீப் மிரட்டியிருந்தார். ‘நான் ஈ’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய்யின் ‘புலி’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

சுதீப் கன்னடம், ஹிந்தி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தமிழ் மொழியில் ‘சேது, வாலி, தீனா, ரன், பகவதி, தில்’ போன்ற பல ஹிட் படங்களின் கன்னட ரீமேக்கில் சுதீப் தான் நடித்திருந்தார். இப்போது சுதீப் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் சுதீப்பின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

Share.