மாதவனை பார்த்து வியந்த நடிகர் சூர்யா !

நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ராக்கெட்ரி . நடிகர் மாதவன் கதாநாயகனாகவும் நடிகை சிம்ரன் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள் . சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். நடிகர் ஷாருக் கான் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் மேலும் நடிகர் சூர்யா தமிழ் மொழியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் . இருவரும் இந்த சிறப்பு தோற்றத்தில் பணம் வாங்காமல் நடித்து உள்ளனர் .

இந்த படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி அவர்களின் கதை . இந்த படத்தில் நம்பி அவர்களின் 27வது முதல் 75 வரை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை படமாக எடுத்து உள்ளனர் .இந்த படம் கொரோனா காரணத்தினால் தொடர்ந்து திரையரங்கில் வெளியாவதில் தாமதமாகி வருகிறது .

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்டரி படத்தை திரையீட்டுள்ளனர். இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வந்தனர் குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் மாதவனை பாராட்டி இருந்தார் . இந்திய சினிமாவிற்கு புதிய குரலாக இந்த படம் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார் .

இந்நிலையில் ராக்கெட்ரி படம் ஜூலை 01-ஆம் தேதி வெளியாகும் என்று திரை அரங்கில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது . நீண்ட காலமாக இந்த படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்குக் இந்த செய்தி மகிழ்ச்சி அளித்துள்ளது . இந்நிலையில் நடிகர் சூர்யா ராக்கெட்ரி படத்தின் செட்டில் மாதவன் மற்றும் நம்பி நாராயணன் ஆகியோருடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது .

Share.