தமிழக காவல்துறைக்கு நடிகர் சூர்யா செய்த உதவி !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா . இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன் .இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார் . இந்த படம் சுமாரான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் .

நடிகர் சூர்யா சினிமாவை தவிர தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளின் கல்விக்காக பல உதவிகளை செய்து வருகிறார் . மேலும் சமூக பிரச்சனைக்கு பலவற்றில் இவரது குரல் முதல் குரலாக ஒலிக்கும் . நீட் தேர்வுக்கு எதிராக இவர் பலமுறை பேசி உள்ளார் . புயல் , வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தமிழ் சினிமாவில் இருந்து உதவ வரும் முதல் ஆளாக நடிகர் சூர்யா இருக்கிறார் .

அந்த வகையில் நடிகர் சூர்யா தற்பொழுது தமிழக காவல் துறைக்கு உதவி செய்துள்ளார் .தெரு ஓரங்களில் மிகவும் நலிவடைந்த நபர்களின் உணவு மற்றும் மருத்துவ உதவிக்காக தமிழக காவல்துறை உருவாக்கியதுதான் காவல் கரங்கள். அந்த அமைப்பிற்கு தேவையான சூர்யா அவர்கள் ஒரு வாகனமும் உணவு பாத்திரங்களும் தமிழக காவல்துறைக்கு அன்பளிப்பாக இன்று கொடுத்துள்ளார். சூர்யாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .

Share.