நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு தெலுங்கு மொழியில் அமைந்த முதல் படம் ‘நுவ்விலா’. ‘நுவ்விலா’ படத்துக்கு பிறகு ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல், எவடே சுப்ரமண்யம்’ ஆகிய படங்களில் முக்கிய ரோலில் நடித்தார் விஜய் தேவரகொண்டா.

அதன் பிறகு ‘பெல்லி சூப்புலு’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவை ஹீரோவாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தெலுங்கு சினிமா. சூப்பர் ஹிட்டான இந்த படத்துக்கு பிறகு ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘துவாரகா, அர்ஜுன் ரெட்டி, ஏ மந்த்ரம் வேசவே, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா’, தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக ‘நடிகையர் திலகம், நோட்டா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என படங்கள் குவிந்தது.

இப்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘லைகர்’ மற்றும் இயக்குநர் சிவ நிர்வனா படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (மே 9-ஆம் தேதி) விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, சிவ நிர்வனா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் தேவரகொண்டா தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.