விஜய் ரசிகர்களின் புதிய கான்செப்ட் !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மிருகம். இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது. படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் தனது 67 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தின் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது . இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது .

மேலும் நடிகர் விஜய் பல இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார் . அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறனும் ஒரு கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார் ஆனால் அந்த கதை இன்னும் உறுதியாகவில்லை . நடிகர் விஜய்யின் ரசிகர்கள் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து விஜய் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் . எனவே சமூக வலைத்தளங்களில் நிறைய புதிய போஸ்டர்களை தயாரித்து சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர் .

 

Share.