விஜய்யின் தந்தையிடமிருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு வந்த இன்ப அதிர்ச்சி!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சீரியலில் அண்ணன் தம்பி சென்டிமென்ட் தொடர்பான கதையில் முதல் தம்பியாக நடித்திருக்கும் நடிகர் வெங்கட்டிற்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு செய்தி வந்துள்ளது.

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யின் தந்தை தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம். இதுகுறித்து மிகவும் சந்தோஷமாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் வெங்கட்.

விஜய்யின் தாய் சோபனா இந்த சீரியலின் மிகப்பெரிய ஃபேன் என்றும், அவரின் பரிந்துரை பேரில்தான் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும், அதனால் அவருக்கு தனது மிகப்பெரிய நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுருக்கிறார்.

இவர் அடுத்த சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். முதலில் ஆங்கரிங் மூலம் தொலைக்காட்சியில் வந்த இவர் சில சீரியல்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமாகியுள்ளார் நடிகர் வெங்கட். விரைவில் வெள்ளித்திரையில் இவரை காணலாம்.

Share.