நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு !

இந்திய சினிமாவில் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம் . தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை வைத்துள்ளார் மேலும் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது .விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான் . இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . மகான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது . இந்த படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது . இந்நிலையில் நடிகர் விக்ரம் அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் . ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் .

வருகின்ற ஜூலை 15-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் தற்போது நடிகர் விக்ரம் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது . சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல். நடிகர் விக்ரம் நடித்து பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது . நடிகர் விக்ரம் விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்பது ரசிகர்கள் உட்பட அனைவரது எண்ணமாக இருக்கிறது .

Share.