சமூக வலைத்தளமான ட்விட்டரில் என்ட்ரியான நடிகர் விக்ரம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்துள்ள படம் ‘கோப்ரா’. இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளாராம்.

இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முகல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

ஏற்கனவே, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் விக்ரம் இருக்கிறார். தற்போது, விக்ரம் ட்விட்டரில் என்ட்ரியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விக்ரமே ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Share.