விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் !

2012-ஆம் வெளியான கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு . இவர் இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகராக திகழ்ந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் . இவர் தமிழ் இவர் அறிமுகமான முதல் படம் கும்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

கும்கி படத்தை தொடர்ந்து இவன் வேற மாதிரி , அரிமா நம்பி , சிகரம் தொடு , என தொடர்ந்து பல படங்களில் நடித்தார் . சில படங்கள் வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் இவர் படங்கள் வெற்றி அடையவில்லை . இருந்தாலும் இவர் படங்களுக்கு சுமாரான வரவேற்பு இவர் படங்களுக்கு இருந்து வருகிறது . அசுரகுரு , புலிக்குத்தி பாண்டி படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .

இதனையடுத்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டாணாக்காரன் . அந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் விக்ரம் பிரபு திரை பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது . மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார் .

இந்நிலையில் விக்ரம் பிரபு அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் தகவல் வெளியாகி இருக்கிறது .அறிமுக இயக்குனர் அந்த படத்தை இயக்க உள்ளார் . அவரின் பெயர் ஹரேந்தர் . இந்த படத்திற்கு ரத்தமும் சதையும் என்று பெயர் வைத்துள்ளனர் . படத்தின் முதல் பார்வையை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியீட்டுள்ளார்.

Share.